ॐ ஸ்ரீ மகாதேவி ஸ்ரீதேவி அம்மன் துணைOm Sri Mahadevi Sridevi Amman Thunai

The aalayam is located at 390, Aishwarya Nagar, near the Olaiyur Ring Road, Trichy – 620 021, Tamil Nadu, India. Tiruchirappalli lies on major rail and road corridors and is easily reached from all parts of Tamil Nadu. See How to Reach.

ஸ்ரீ மகாதேவி ஆலயம் 390, ஐஸ்வர்யா நகர், ஓலையூர் ரிங் ரோடு அருகில், திருச்சி – 620 021, தமிழ்நாடு என்ற முகவரியில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் சாலை வழித்தடத்தில் உள்ள திருச்சியை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எளிதாக அடையலாம். வழித்தடம் பார்க்கவும்.

The presiding deity is Sridevi Amman, worshipped as Kanni Deivam — the supreme power. There are sannidhis for Vinayagar, Murugar, Durga, Kali, the Navagrahas, Suriyan, Chandran, the Saptha Kanni, Maha Meru, Naga Devathai (the Kaval Deivam), Mahalakshmi, Saraswathi and Annapoorani. See all sannidhis.

தேவி: கன்னி தெய்வம் ஸ்ரீதேவி. கன்னி தெய்வமாகப் போற்றப்படும் ஸ்ரீதேவி. விநாயகர், முருகன், துர்கா, காளி, நவக்கிரகங்கள், சப்த கன்னி, சூரியன், சந்திரன், மகாமேரு, நாக தேவதை காவல் தெய்வம், மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சன்னதிகள் பார்க்கவும்.

  1. Maintain silence near the sanctum.
  2. Circumambulate (pradakshinam) in the clockwise direction.
  3. Follow the instructions of the archakas and temple staff.
  1. கருவறை அருகே அமைதி காக்கவும்.
  2. வலம் வரும்போது கடிகாரச் சுற்றில் செல்லவும்.
  3. அர்ச்சகர்கள் மற்றும் ஆலயப் பணியாளர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும்.

Temple volunteers are happy to assist elderly and differently-abled devotees. Please inform the temple office in advance, especially on festival days, so that arrangements can be made.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு ஆலயத் தன்னார்வலர்கள் உதவுவார்கள். குறிப்பாகத் திருவிழா நாட்களில், முன்கூட்டியே ஆலய அலுவலகத்துக்குத் தெரிவிக்கவும்.

The temple is open daily from 6:03 AM to 2:00 PM. Hours are extended on festival days and on special Arul Vaakku Tuesdays. See the full schedule.

ஆலயம் தினமும் காலை 6:03 முதல் மதியம் 2:00 வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களிலும், சிறப்பு அருள்வாக்கு செவ்வாய்க்கிழமைகளிலும் நேரம் நீட்டிக்கப்படும். முழு அட்டவணை பார்க்கவும்.

The morning abhishekam (around 8:00 AM), the Tuesday Arul Vaakku Uttharavu and the Pournami pooja are the most auspicious times for darshan.

காலை அபிஷேகம் (சுமார் 8:00), செவ்வாய்க்கிழமை அருள்வாக்கு – உத்தரவு, பௌர்ணமி பூஜை ஆகியவை தரிசனத்துக்கு மிக உகந்த நேரங்கள்.

Darshan is free for all devotees. Charges apply only for special sevas such as special archana, special abhishekam and special alankaram. Arul Vaakku Uttharavu is ₹111/- only, only on Tuesday mornings from 11:00 AM. Postal uttharavu is available.

அனைவருக்கும் இலவசம். சிறப்பு அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் போன்ற சிறப்புச் சேவைகளுக்கு மட்டுமே கட்டணம். அருள்வாக்கு உத்தரவுக்கு ₹111/- மட்டும். செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு மட்டும். தபால் உத்தரவு உண்டு.

Arul Vaakku is held every Tuesday. The Yagam pooja begins at 10:30 AM and the Arul Vaakku Uttharavu follows at about 11:00 AM. The offering is ₹111/-. Devotees who cannot come in person may receive a postal uttharavu — please contact the temple office on 98651 59292 for the procedure.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு யாகம் பூஜை தொடங்கி, சுமார் காலை 11:00 மணிக்கு அருள்வாக்கு உத்தரவு வழங்கப்படும். காணிக்கை ₹111/-. நேரில் வர இயலாதவர்கள் அஞ்சல் வழியாகவும் உத்தரவு பெறலாம் — நடைமுறைக்கு ஆலய அலுவலகத்தை 98651 59292 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

No. The sanctum is closed during an eclipse and reopened after the prescribed purification rituals. Please contact the temple office for the timings on eclipse days.

இல்லை. கிரகண நேரங்களில் கருவறை மூடப்பட்டு, புனிதச் சடங்குகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும். கிரகண நாளின் நேரங்களை அறிய ஆலய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்.

Archana can be booked at the temple counter during darshan hours. Archana, abhishekam, alankaram, homam and other special sevas should be booked in advance through the temple office. Please share the devotee's name, nakshatram (birth star), gothram, the requested pooja or seva, and the preferred date. See Sevas.

அர்ச்சனையைத் தரிசன நேரத்தில் ஆலயக் கவுண்டரில் பதிவு செய்யலாம். அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம், ஹோமம் போன்ற சிறப்புச் சேவைகளை ஆலய அலுவலகம் மூலம் முன்கூட்டியே பதிவு செய்யவும். பக்தரின் பெயர், நட்சத்திரம், கோத்திரம், விரும்பும் பூஜை அல்லது சேவை, பூஜை செய்ய வேண்டிய நாள் ஆகியவற்றைத் தெரிவிக்கவும். சேவைகள் பார்க்கவும்.

Yes. Pournami (full-moon) archanai is performed for Sridevi Amman, and Lalitha Sahasranama archanai is held at the aalayam. Dates follow the Tamil panchangam, so please contact the temple office for the details. See Monthly Worship.

ஆம். ஸ்ரீதேவி அம்மனுக்குப் பௌர்ணமி அர்ச்சனையும், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகின்றன. தேதிகள் தமிழ் பஞ்சாங்கப்படி அமைவதால், விவரங்களுக்கு ஆலய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும். மாத வழிபாடு பார்க்கவும்.

Yes — devotees in other cities or abroad can write to the temple office with their name, nakshatram and gothram, and make the offering by bank transfer or UPI. A special archana will be performed in their name on the day they request.

ஆம். பெயர், நட்சத்திரம், கோத்திரம் ஆகிய விவரங்களுடன் ஆலய அலுவலகத்துக்கு எழுதி, வங்கி அல்லது UPI மூலம் காணிக்கை செலுத்தினால், நீங்கள் கேட்கும் நாளில் உங்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படும்.

Families usually visit at least once a year and perform abhishekam, archana and homam in the family's name. It is auspicious to offer the first prayer to the Kula Deivam and Ishta Deivam before weddings and other new beginnings. The temple office can help arrange all the offerings.

ஆண்டுக்கு ஒருமுறையேனும் குடும்பத்துடன் வந்து, குடும்பப் பெயரில் அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம் செய்வது மரபு. திருமணம் போன்ற புதிய தொடக்கங்கள் அனைத்துக்கும் முதல் வேண்டுதலைக் குலதெய்வத்துக்கும் இஷ்ட தெய்வத்துக்கும் செய்வது சிறப்பு. ஏற்பாடுகளுக்கு ஆலய அலுவலகம் உதவும்.

Flowers such as jasmine and arali, ghee for your prayers, gingelly oil for the lamps, and a pavadai or saree for the Mother. Other pooja articles are also available at the temple pooja stall.

மல்லிகை, அரளி போன்ற மலர்கள், வேண்டுதலுக்கு நெய், விளக்கிற்கு நல்லெண்ணெய், அன்னைக்குப் பாவாடை அல்லது புடவை. மற்ற பூஜைப் பொருட்கள் கோவில் பூஜா ஸ்டாலில் இருக்கின்றன.

Yes — kumkum, turmeric and flower prasadam are given after archana. Annadanam is offered on festival days and sponsored days.

ஆம். அர்ச்சனைக்குப் பின் குங்குமம், மஞ்சள், பூ பிரசாதம் வழங்கப்படும். திருவிழா மற்றும் உபயதாரர் நாட்களில் அன்னதானமும் வழங்கப்படும்.

You can donate online on the Donate page: fill in your name, purpose and amount, pay by UPI (Google Pay, PhonePe, Paytm or BHIM) by scanning the temple QR code or opening your UPI app, then send the details on WhatsApp for your receipt. Offerings are also accepted in person at the temple annadhanam hundi or office, or by bank transfer (NEFT).

காணிக்கை பக்கத்தில் ஆன்லைனில் செலுத்தலாம்: பெயர், நோக்கம், தொகையை நிரப்பி, ஆலய QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ UPI செயலியைத் திறந்தோ (Google Pay, PhonePe, Paytm, BHIM) செலுத்தி, ரசீது பெற விவரங்களை WhatsApp-இல் அனுப்பவும். ஆலய அன்னதான உண்டியல், அலுவலகத்தில் நேரிலும், வங்கி NEFT மூலமும் செலுத்தலாம்.

Yes — devotees can sponsor annadanam on birthdays, anniversaries, or in memory of loved ones. The sponsor's name is included in the sankalpam of that day's poojas. “Annadanam is Mahadanam — a deed of great merit.”

ஆம். பிறந்தநாள், திருமண நாள் அல்லது முன்னோர் நினைவு நாளில் அன்னதானம் வழங்கலாம். அன்றைய பூஜையின் சங்கல்பத்தில் உபயதாரர் பெயர் சேர்க்கப்படும். (“அன்னதானம் மகாதானம் – புண்ணியமானது”)

The aalayam is about 6 km from Trichy Airport and about 8 km from Trichy Junction and the Central Bus Stand. Autos, taxis and city buses towards K.K. Nagar and Olaiyur are available. See How to Reach.

ஆலயம் திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 6 கி.மீ, திருச்சி சந்திப்பு மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. கே.கே. நகர், ஓலையூர் செல்லும் ஆட்டோ, டாக்ஸி, நகரப் பேருந்துகள் உள்ளன. வழித்தடம் பார்க்கவும்.

Trichy has hotels and lodges for every budget, especially around the Central Bus Stand, Trichy Junction and Srirangam. Both areas have easy road access to Olaiyur.

திருச்சியில், குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், திருச்சி சந்திப்பு, ஸ்ரீரங்கம் பகுதிகளில் அனைத்து வசதிகளுக்கும் ஏற்ற விடுதிகள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து ஓலையூருக்கு எளிதாக வரலாம்.

Srirangam Sri Ranganathaswamy, Thiruvanaikaval Jambukeswarar–Akilandeswari, Rockfort Ucchi Pillayar, Samayapuram Mariamman, Uraiyur Vekkali Amman and Vayalur Murugan. Visit Sri Mahadevi Aalayam first in the morning, as it closes at 2:00 PM. See the Trichy pilgrimage guide.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார், சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளி அம்மன், வயலூர் முருகன். ஆலயம் மதியம் 2:00 மணிக்கு நடை சாத்தப்படுவதால், காலையில் முதலில் ஸ்ரீ மகாதேவி ஆலயத்திற்கு வாருங்கள். திருச்சி யாத்திரை வழிகாட்டி பார்க்கவும்.

No matching questions. Please call the temple office on 98651 59292.பொருந்தும் கேள்விகள் இல்லை. ஆலய அலுவலகத்தை 98651 59292 என்ற எண்ணில் அழைக்கவும்.

Still Have a Question?இன்னும் கேள்வி உள்ளதா?

The temple office will be happy to help you plan your visit or seva.

உங்கள் வருகை அல்லது சேவையைத் திட்டமிட ஆலய அலுவலகம் மகிழ்ச்சியுடன் உதவும்.